யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் பேர்லின் தமிழாலயத்தின் பொங்கல் விழா 2017

பேர்லின் தமிழாலயத்தின் பொங்கல் விழா கடந்த 15 .01 .2017 அன்று மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது .மண்ணுக்காக மரணித்த மாவீரர்களுக்கும் மற்றும் மக்களுக்குமான அகவணக்கத்தை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் இந்நிகழ்வு ஆரம்பமாகியது.கடுமையான வெண்பனி வீழ்ச்சியும் அதனூடான கடும் குளிரையும் பொருட்படுத்தாது தாயகத்தின் தைப்பொங்கலை அப்படியே நினைவுபடுத்தும் வகையில் பொங்கல் பொங்கி பொங்கலோடு முக்கனிகளும் சேர்த்துக் கதிரவனுக்குப் படைக்கப்பட்ட காட்சி தமிழர் திருநாளின் நினைவகலாப் பதிவாகும்.
IMG_2899தொடர்ந்து மாணவர்களால் தமிழர்களின் இயல் இசை நாடக நிகழ்வுகளும் கவியரங்கம் ,நடனங்கள் போன்ற நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.தொன்மைச் சிறப்புமிக்க தமிழரின் பண்பாட்டையும் வாழ்வியலையும் வெளிப்படுத்தும் தமிழர் திருநாள் தமிழ்க் கல்விக்கழகத்தின் பேர்லின் தமிழாலயத்தின் மாணவர்களால் கொண்டாடப்பட்டமை எமது பண்பாடு இளைய தலைமுறையினரிடம் கையளிக்கப்பட்டமையையும் அதனை அவர்கள் விருப்புடன் கையேற்று இனிவரும் அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் கையளிப்பார்கள் என்ற நம்பிக்கையையும் சுட்டிகாட்டி நின்றது.

தாயகத்தில் வறுமையில் வாடித் துடிக்கும் எமது உறவுகளுக்கு உதவிக்கு கரம் நீட்டும் முகமாகவும் இத் தமிழர் திருநாள் மாணவர்களால் கடைப் பிடிக்கப்பட்டது. பேர்லின் தமிழாலயத்தாலும் , தமிழாலய பெற்றோர்களாலும், தாயகத்தில் முன்னெடுக்கப்பட்ட வாழ்வாதார உதவிகளின் விபரங்கள் திரையில் காண்பிக்கப்பட்டது. தமிழ் மொழியின் பெருமையையும் , தமிழர்களின் பாரம்பரிய உணவுவகைகளையும் மையப்படுத்தி பேர்லின் தமிழாலயத்தின் இளம் பெற்றோரின் மற்றும் படைப்பாளியின் உருவாக்கத்தில் வெளிவந்த ‘அடிசில் 2017’ – தமிழ் இலக்கிய உணவு நாட்காட்டியும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

berlin ponkal6 K1024_berlin ponkal 5 K1024_berlin ponkal6

K1024_IMG_2505-min K1024_IMG_2507-min K1024_IMG_2499-min K1024_IMG_2555 K1024_IMG_2500-min K1024_IMG_2492-min

 

 

 

K1024_berlin ponkal1 K1024_berlin ponkal 4  IMG_2873 K1024_IMG_3311 K1024_IMG_3305 K1024_IMG_3286 K1024_IMG_3272 K1024_IMG_3164 K1024_IMG_3088 K1024_IMG_3091 K1024_IMG_3111 K1024_IMG_3116 K1024_IMG_3137 K1024_IMG_3044 K1024_IMG_3042 K1024_IMG_3019 K1024_IMG_3018 K1024_IMG_2951K1024_IMG_2946 K1024_IMG_2942 K1024_IMG_2924  K1024_IMG_2899 K1024_IMG_2858 K1024_IMG_2860 K1024_IMG_2866 K1024_IMG_2876 K1024_IMG_2890 K1024_IMG_2853 K1024_IMG_2844 K1024_IMG_2792 K1024_IMG_2787 K1024_IMG_2716 K1024_IMG_2713 K1024_IMG_2703 K1024_IMG_2695 K1024_IMG_2688 K1024_IMG_2684K1024_IMG_2652 K1024_IMG_2645 K1024_IMG_2632 K1024_IMG_2624 K1024_IMG_2623 K1024_IMG_2548  K1024_IMG_2608  K1024_IMG_2521-min K1024_IMG_2519-min    K1024_berlin ponkal2 K1024_berlin ponkal3 K1024_IMG_2337-min K1024_IMG_2492-min  K1024_berlin ponkal1 K1024_berlin ponkal 4 IMG_3080 IMG_3075 IMG_2899

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.