தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் பானை வைத்து ,ஒற்றுமை எனும் தீ மூட்டி பேர்லின் தமிழாலயத்தில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் திருநாள்.

உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து“ எனும் குறள் வழி தமிழ்க் கல்விக்கழக பேர்லின் தமிழாலயப் பொங்கல் பால் போல் மனமும் .நீர் போல் தெளிவும் ,வார்த்தையில் இனிப்புமாய் சீரும் சிறப்புமாய் பொங்கி மகிழ்ந்தது .கல்வி கலை பண்பாடு எனும் அசையாத விழுமியக் கற்கள் மூன்று .அதன் மேல் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் பானை வைத்து ,ஒற்றுமை எனும் தீ மூட்டி அரிசியுடன் இட்ட பசும் பால் ஆதவன் வரும் திசை பார்த்து பொங்கி வழிந்தது இன்பப் பொங்கலாய்.
24
அகவணக்கத்துடன் ஆரம்பித்த விழா மங்கள விளக்கேற்றல் தமிழாலய கீதம் வரவேற்புரை வரவேற்ப்பு நடனம் என மேடை நிறைந்த பிள்ளைகளுடன் ஆரம்பமாகியது .ஒரு இனத்தின் அடையாளம் மொழி . அந்த தாய்மொழியை அகவை ஐந்து கூட நிரம்பாத மழலைச் செல்வங்கள் உரையாற்றலும் பாட்டுமாய் ஆடி அரங்கத்தை கரவொலியால் நிறைத்தார்கள்.உரையாடல் கவிதைகள் நாடகம் என நிகழ்ச்சி தொடர்ந்ததும் ஓர் அழகு .
அகவை இருபத்தைந்தை நெருங்கும் எமது தமிழாலயம் அன்று ஒரு சிறு அறையில் பாடசாலை ஆரம்பித்த போது பணியாற்ற வந்த மூத்த ஆசிரியர்களின் வழிகாட்டலில் அன்று மழலைகளாய் வந்து கல்வி கற்ற சிறார்கள் இன்று ஆசிரியர்களாய் பணியாற்றுவதும் ஒரு தலை முறை கடந்த பெரு விருட்சமாய் பேர்லின் தமிழாயம் விளங்குவதற்கு ஒரு ஆழமான சான்றாகும் .
IMG_0355வினா மாலை ,நாடகம் , பொம்மலாட்டம் நடனம் , ,ஆண்டு பன்னிரண்டு மாணவர்களின் கவி அரங்கம் என அனைத்து நிகழ்வுகளும் மிகச் சிறப்பாக நடைபெற்றது .இடைவேளையில் முக்கனியுடன் பொங்கலும் ,குழை சோறும் என விருந்தோம்பலுடன் விழா அகமும் புறமும் நிறைய இனிதே நன்றியுரையுடன் நிறைவு பெற்றது.
4 3 2 1 7 7 5 6 8 9 10 11
IMG_0135 IMG_0138
12 14 1516 17 18 19 20 21 22 24 25 26 IMG_0038 IMG_0007 29 28 27 IMG_0051 IMG_0065 IMG_0069 IMG_0092IMG_0092 IMG_0098 IMG_0099 IMG_0102 IMG_0108 IMG_0115 IMG_0206 IMG_0190 IMG_0186 IMG_0180 IMG_0173 IMG_0210 IMG_0226 IMG_0263 IMG_0269 IMG_0272 IMG_0374 IMG_0355 IMG_0334 IMG_0320 IMG_0285 IMG_0392 IMG_0453 IMG_1000 IMG_1011 IMG_9967IMG_9970 IMG_9971 IMG_9978 IMG_9995

Comments are closed.