தமிழாலய கீதம்

கல்வியும் கலையும்
நம் இரு கண்கள்
நல் தமிழ் மொழி
எங்கள் உயிராகும்


பன்மொழிக் கல்வியும்
பல்கலை நுட்பமும்
பயிற்றுவிக்கும் தமிழாலயம்
எங்கள் தமிழாலயம்


தன்மானத் தமிழர்
பண்பாடதனை
தரணியில் பரப்பிடும் தமிழாலயம்
எங்கள் தமிழாலயம்


பாலகர் நாங்கள்
பாடி ஆடி
படித்து மகிழும் ஆலயம்
எங்கள் தமிழாலயம்


பாவலர் போற்றிட
நாவலர் வாழ்த்திட
என்றென்றும் வாழிய தமிழாலயம்
எங்கள் தமிழாலயம்

தமிழ்த்திறன் போட்டி 2023 ற்கான விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
This is default text for notification bar