அறிவியல் வாரம் 2020 / Projektwochen 2020

கோடைகால விடுமுறை கழித்து தமிழாலயம் மீண்டும் ஆரம்பமாகிய பொழுது நங்கள் முற்கூட்டியே திட்டமிடப்படி அறிவியல் வாரம் என்னும் தலைப்பில் மாணவர்களுக்கான செயல்வழிக் கல்வி நடைமுறையினை அறிமுகப்படுத்தியிருந்தோம். அவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வண்ணம் ஒவ்வொரு வகுப்பிற்கும் வெவ்வேறு தலைப்புகளை இளம் ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்து, மூத்த ஆசிரியர்களின் உதவியோடு இவற்றினைத் தயார் படுத்தினார்கள். 

Nach den langen Sommerferien startete Thamilalayam Berlin e.V.  mit einem Projekt. Hier sollten die Schüler*innen nicht direkt mit dem Lernen konfrontiert werden. Stattdessen sollten sie kreativ und mit Spaß und Interesse an bestimmten Themen drei Wochen lang arbeiten. Dafür haben die jungen Lehrkräfte Themen für die jeweiligen Klassenstufen ausgewählt, dies mithilfe der anderen Lehrkräfte geplant und umgesetzt. Die ersten drei Wochen konnten die Schüler*innen die tamilische Sprache durch Spiele und anderen Themen erforschen.

 

பாலர் நிலை , வளர்நிலை  1

முதலாவது வாரத்தில் பாலர் நிலை மாணவர்களும் வளர்நிலை 1 மாணவர்களும்  ஒருவரையொருவர் அறிந்துகொள்வதற்கு ஆசிரியர்கள் விளையாட்டுகளைத் தயாரித்தார்கள். இரண்டாவது வாரத்தில் மாணவர்கள் குழுக்களாகப் பிரிகப்பட்டு, இளம் ஆசிரியர்களால் தமிழில் தயாரிக்கப்பட்ட HalliGalli, Memory, Domino போன்ற விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்தார்கள். காட்சிப்படுத்தலுடன் கூடிய விலங்குகள் மற்றும் பறவைகளின் ஒலியைக் கண்டறிதலில் மாணவர்கள் மிகவும் ஆர்வமுடன் பங்குபற்றி தமிழில் உரையாடியதை அவதானிக்க முடிந்தது. இறுதி வாரத்தில் அறிவியல் வாரத் திட்டத்தின் நினைவாகவும் சிறு பரிசாகவும் மாணவர்கள் தங்களின் பெயர்களை Playmais மூலம் தயாரித்தனர்.

Vorschule und 1. Klasse

Zu Beginn der ersten Projektwoche war es uns wichtig, dass die Schüler sich untereinander kennenlernen. Dafür wurden einige Kennlernspiele gespielt. In der zweiten Wochen wurden sie in Gruppen geteilt und spielten Geschicklichkeitsspiele wie z.B. Halli Galli, Memory, Domino. Diese Spiele wurden dafür von den jungen Lehrkräften auf Tamilisch erstellt und Stationarbeit gespielt. Auch wurden Klassenspiele anhand von PowerPoint Präsentationen (Beamer) erstellt. Die dritte und letzte Woche sollte als kleine Überraschung und sowohl als Erinnerungsstück für die Schüler*innen dienen. Dazu haben die Schüler deren individuellen Namen mit PlayMais kreativ erstellt.

 

வளர்நிலை  2 & 3

அறிவியல் வாரத்தில் வளர்நிலை 2, 3 மாணவர்கள் கிழமைகள், மாதங்கள், பருவகாலங்கள் பற்றிப் பாட்டுகள் தமிழ் மொழியிலும் ஜேர்மன் மொழியிலும் சேர்ந்து பாடி, கைவேலைகள் செய்தும், HalliGalli, Memory, Domino போன்ற விளையாட்டுக்களை விளையாடியம் மகிழ்ந்தார்கள். இந்த நடைமுறை மாணவர்களுக்கு மிகவும் நன்றாகப் பிடித்திருந்தது. பெற்றோர் மாணவர்களை கூட்டவரும்போது, வீட்டிற்கு செல்லக்கூட சிலருக்கு விருப்பமிருக்கவில்லை. அதைப் பார்த்த போது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

Klasse 2 & 3

In den Projektwochen erlernten die Schüler*innen die Wochentage, Monate und Jahreszeiten, indem sie es musikalisch durch Lieder sangen. Die Lieder wurden sowohl auf Tamil als auch auf Deutsch gesungen. Dazu wurden in der ganzen Gruppe Jahreszeiten Uhren gebastelt. Viele unterschiedliche Spiele wurden gespielt, um den Tag für die Kinder noch zu versüßen. Vor allem waren die Spiele eine tolle Abwechslung für die Schüler*innen. Die Projektwoche hat allen so gut gefallen, dass die meisten Schüler*innen traurig waren als der Tag vorbei war.

 

வளர்நிலை  4 & 5

வளர்நிலை 4 மற்றும் 5 மாணவர்கள் “தாயகத்தில் எமது பெற்றோர் இயற்கையோடு தொடர்புடைய அன்றாட வாழ்வு” என்னும் தலைப்பை எடுத்தார்கள். இந்த நோக்கத்திற்காக ஆசிரியர் மாணவர்களுக்கு தலைப்பை விளங்கப்படுத்தி அவர்க்ளுடன் சில கேள்விகளை தயார் செய்து வைத்தனர். இக்கேள்விகளை மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் வீட்டில் கேட்டார்கள். அதைத் தொடர்ந்து பெற்றோர்களிடமிருந்து கிடைத்த பதில்களை வைத்து மாணவர்கள் குழுக்களாக சேர்ந்து சுவரொட்டிகளை உருவாக்கினார்கள். பின்னர் அச்சுவரொட்டிகளை முழு வகுப்பினருக்கும் வழங்கினார்கள். சில கலந்துரையாடல்கள்; மற்றும் விளையாட்டுகள் மூலம் மாணவர்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர்.

Klasse 4 und 5

Die Schüler der 4. und 5. Klasse befassten sich in den drei Projektwochen mit dem Thema, wie unsere Eltern in der Heimat ein naturverbundenes Leben führten.  Dazu erstellten sie, nachdem Ihnen die Thematik erklärt und näher gebracht wurde, ein Interview. Die Schüler haben die zusammen erarbeiteten Fragen des Interviews zu Hause ihren Eltern gestellt. Die daraus resultierten Antworten dienten dazu, in Gruppen jeweils ein Plakat zu erstellen, welche im Anschluss vor der gesamten Klasse vorgestellt wurden. Auf diesen hatten die Schüler*innen die Möglichkeit kreativ zu sein. Zudem wurden die Projekttage verschönert mit Spielen und weiteren kleinen Aufgaben.

 

வளர்தமிழ் 6 & 7

வளர்தமிழ் 6 மற்றும் 7 மாணவர்கள் அறிவியல் வாரத்தில் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, அக்குழுக்களில் கதைகளை தங்கள்  கற்பனைக்கேற்றவாறு எழுதினார்கள். இதற்காக முதலாவது வாரத்தில் ஆசிரியர்களும் மாணவர்களும் கதை எழுதும் முறை பற்றி  கலந்துரையாடினார்கள். இதை அடுத்து  மாணவர்கள் வெவ்வேறு தலைப்புகளில் கதைகளைத் தயாரித்தனர். குழுவில் உள்ள ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு கதாபாத்திரமும் கொடுக்கப்பட்டது. இறுதி வாரத்தில் மாணவர்கள் தங்களது கதையை நாடகமாக நடித்துக்  காட்டினார்கள். கதாபாத்திரதிற்கு ஏற்ற வாறு ஆடை ஆபரணங்கள் அணிந்து, மிகவும் ஆர்வத்துடன் இதனை வழங்கினார்கள். ஒவ்வொரு வாரமும் “நகரம், நாடு , நதி “ போன்ற விளையாட்டுகளைத் தமிழ் மொழியில்  எழுதியும் விளையாடியும் மகிழ்ந்தார்கள். இந்த மாணவர்களுக்கும் இந்த நிகழ்வுகள் ஒரு சுவாரசியமான நிகழ்வாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Die Schüler*innen der 6. und 7. Klassen wurden zunächst in Gruppen eingeteilt, um später in diesen Gruppen ihre eigenen kreativen Geschichten zu erstellen. Dafür haben die Lehrkräfte und die Schüler*innen erstmal besprochen, wie man eine Geschichte überhaupt schreibt und wie der Aufbau aussieht. Die Schüler*innen durften sich ein eigene Themen in der Gruppen ausdenken und dazu mit Unterstützung der Lehrerinnen die Geschichte auf Tamil verschriftlichen, um es in der 3. Woche als Theaterstück darzustellen. Alle Schüler*innen hatten eine Rolle in diesem Theaterstück. Es gab lustige Geschichten über Tiere, aber auch über Themen wie Hilfsbereitschaft, Muttersprache etc. In der letzten Woche kamen die Schüler*innen verkleidet in die Schule und präsentierten ihre Stücke. Hier kam ihre Kreativität und Selbstständigkeit in den Vordergrund. Auch diese Klassen spielten zur Abwechslung mehrere Spiele, wobei sie unglaublich viel Spaß hatten. 

ஆண்டு 8 – 12

” நாங்கள் ஏன் இங்கு வந்தோம்?” என்னும் வினாவிற்கு விடையைத் தேடி ஆண்டு எட்டு முதல் பன்னிரெண்டு வரையிலான மாணவர்களுடன் எமது பயணத்தை ஆரம்பித்தோம். முதற்படியாக நாம் எம்மைப் பற்றி அறிந்துகொள்ள “எப்பொழுது யாருடன் எங்கு நாம் தமிழில் உரையாடுகின்றோம்?”, “எப்பொழுது நாம் “தமிழர்” என்று எம்மை அடையாளப்படுத்துகின்றோம்?” மற்றும் “எமது கலாச்சாரத்தினை எவ்வாறு பேணுகின்றோம்?” போன்ற கேள்விகளிற்கான பதில்களைக் காயலை (Skype) வழியாக மாணவர்களுடன் கலந்துரையாடினோம். அதனை அடுத்து தமிழாலயத்தின் முதல் வாரத்தில் வேற்றுநாட்டவரின் ஆட்சிகாலத்திற்கு முன் (1505ற்கு முன்), வேற்றுநாட்டவரின் ஆட்சிகாலத்தின் போது (1505 முதல் 1948 வரை), வேற்றுநாட்டவரின் ஆட்சிகாலத்திற்கு பின் (1948 முதல்1983 வரை) என்று காலங்களைப் பிரித்து ஈழத்தமிழரின் முழு வரலாற்றையும் ஆராய்ந்தோம். இரண்டாவது வாரத்தில் 1980ற்குப் பின் தாயகத்தை விட்டு அகதிகளாக வெளியேறிய மூத்தவர்களின் கதைகளை மாணவர்கள் கேட்டு, அதனை பதிவாகவும் சுவரொட்டிகளாகவும் ஆதாரப்படுத்தி, முன்வைத்தார்கள். இறுதி வாரத்தில் எமது தாயகத்தின் இன்றைய நிலைபற்றியும், எதிர்காலத்தில் எமது செயற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடி தகவல்களைச் சேகரித்தோம்.

இவ் அறிவியல் வாரத்தின் முடிவில் மாணவர்கள் அனைவரும் எமது தமிழர் வரலாற்றையும் போராட்டத்தின் அடிப்படைக் காரணங்களையம் தமிழரின் புலம்பெயர்விற்கான காரணங்களையும் மிகவும் துல்லியமான முறையில் அறிந்துகொண்டார்கள். 

Klasse 8 – 12

„Warum sind wir hier?“ Zusammen mit den Schüler*innen der 8. – 12. Klasse haben wir uns auf die Suche nach Antworten auf diese Frage gemacht. Zur Einführung haben wir uns insbesondere folgende Fragen gestellt: “Wann, mit wem und worüber sprechen wir auf Tamilisch? “, “Wann identifizieren wir uns als ‚Tamil‘”?”,  und “Wie pflegen wir unsere Kultur?”.  Zu diesen und weiteren Fragen haben wir uns über Skype-Termine und Google Groups vorab ausgetauscht und konnten uns bereits als klassenübergreifende Gruppe persönlich kennenlernen.

Am ersten Präsenztermin in der Thamilalayam Berlin e.V. erkundeten wir vorranging die eelamtamilische Geschichte in diesen drei Zeiträumen: Vorkolonialzeit (vor 1505), Kolonialzeit (1505-1948) und Nachkolonialzeit bis 1983. Für den zweiten Termin begaben sich die Schüler*innen auf eine autobiographische Suche, anhand der sie Informationen zur Geschichte Ihrer Familienmitglieder zusammentrugen, die als erstes in den 1980er als Geflüchtete nach Berlin kamen. Die Dokumentation und Präsentation fanden in verschiedenen Formaten statt, etwa Fotos, Audioaufnahmen und Poster. Am dritten und letzten Termin diskutierten wir die gegenwärtige Lage in Tamil Eelam und unser zukünftiges Engagement zu deren Verbesserung.

பேர்லின் தமிழாலயத்தில் முதல் முறையாக நடைபெற்ற அறிவியல் வாரத்தில்   மாணவர்கள் மிகவும் ஆர்வமாக கலந்துகொண்டதோடு அவர்களிடையே நடாத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டு மிகச் சிறந்த பெறுபேற்றினை வெளிபடுத்தியிருந்தமை ஆசிரியர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. இந்த கருத்துகணிப்பானது மாணவர்கள் ஒரு சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமைந்திருந்தது. மாணவர்கள் சுயமாகச்  சிந்தித்து பதிலளித்ததோடு  அவர்களின் கருத்திற்கும்    தளமமைத்துக்  கொடுக்கப்பட்டிருந்தது.  இந்த முயறற்சிக்கு ஆதரவிைனத் தந்த ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் அனைவருக்கும் பேர்லின் தமிழாலயத்தின் சார்பில் நான்றிகளையும்  பாராட்டுக்களையும்   தெரிவித்துக்கொள்கின்றோம் .

Die von Tamilalayam Berlin e.V. veranstaltete Projektwoche wurde anhand von Evaluationsbögen von den Schüler*innen anonym bewertet. Dabei gab es viele Verbesserungsvorschläge von den Schüler*innen. Jedoch wurde trotz allem deutlich, dass sie es sehr angenehm und lustig bewertet haben. Allen Lehrkräften, Eltern und auch Schüler*innen bedanken wir uns im Namen von Thamilalayam Berlin e.V. für die Planung, Teilnahme und Unterstützung. 

 

Comments are closed.
தமிழ்த்திறன் போட்டி 2023 ற்கான விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
This is default text for notification bar